Saturday, June 09, 2007

Sivaji in Kerala

சிவாஜி படத்திற்கு கேரளாவில் 10 சதவீத வரி விலக்கு அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவாஜி படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கேரளாவிலும் சிவாஜிக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது.
கேரளாவில் திரையிடப்படும் பிற மொழிப் படங்களுக்கு அங்கு வரி விதிக்கப்படுகிறது. பெருநகரங்களில் திரையிடப்படும் பிற மொழிப் படங்களுக்கு 35 சதவீத பொழுதுபோக்கு வரியும், நகராட்சிகளில் திரையிட்டால் 30 சதவீத வரியும், கிராமப்புறங்களில் 25 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் இது அமல்படுத்தப்படுகிறது. மலையாளப் படங்களுக்கு வெறும் 10 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிவாஜி படத்தின் கேரள மாநில விநியோக உரிமையை வாங்கியுள்ள ஜானி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

வரி விதிப்பில் பாரபட்சம் காட்டக் கூடாது, சிவாஜி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் மலையாளப் படங்களைப் போலவே 10 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சிவாஜி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் 10 சதவீத வரியே விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சிவாஜிக்கு 10 சதவீத பொழுது போக்கு வரியே விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

No comments:

Blog Archive