Monday, September 25, 2006

"சிவாஜி" ஷ¨ட்டிங்கில் நயன்தாரா

சென்னை, செப்.25: சென்னை பின்னி மில்லில் ÔசிவாஜிÕ படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே இடத்தில் ஜீவா, நயன்தாரா நடிக்கும் ÔஈÕ படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் நடந்தது.

"ஈ" படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா, "சிவாஜி" ஷ¨ட்டிங் நடப்பதை அறிந்து, அதைப் பார்க்க வேண்டும் என்ற தனது ஆவலை மானேஜரிடம் கூறி அனுப்பினார்.

இதைக் கேள்விப்பட்ட ரஜினி, நயன்தாராவை செட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது, ரஜினி வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை ஷங்கர் படமாக்கிக் கொண்டிருந்தார். நயன்தாரா இந்த காட்சியை பார்த்து ரசித்தார். பின் ரஜினியை சந்தித்தார். இது குறித்து நயன்தாரா கூறும்போது, Ôசிவாஜி படத்தில் ரஜினி முன்பை விட அழகாகத் தெரிகிறார். 20 நிமிடங்கள் அவருடன் பேசினேன். இயக்குனர் ஷங்கரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். "ஐயா" படத்தில் வரும் Ôஒரு வார்த்தை சொல்லÕ பாடல் தனக்கு பிடிக்கும் என ஷங்கர் சொன்னார். அவரிடம், என்னை சிறந்த நடிகை என ரஜினி கூறியது, பெருமையாக இருந்ததுÕ என்றார்