ரஜினி நடிக்கும் `சிவாஜி' படப்பிடிப்பு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது. ரஜினியும், டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரும் ஒரு வாரம் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி விட்டு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பில் அங்குள்ள இந்தியர்களை ரஜினி நடிக்க வைத்த ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினியும் ஷங்கரும் அமெரிக்கா செல்வதற்கு முன்பே அங்குள்ள பிரபல ஆங்கில பத்திரிகைளில் "சிவாஜி'' என்ற தமிழ் படப் பிடிப்பு அமெரிக்காவில் நடை பெற உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க இங்கு வசிக்கும் இந்தியர்கள் தேவை. கல்லூரி முதல்வர் பாத்திரத்துக்கு பொருத்தமான தோற்றம், நடிப்பு ஆர்வம் உள்ளவர் தேவை என்று குறிப் பிடப்பட்டு இருந்தது.
ரஜினி அமெரிக்கா சென்ற பிறகும் இதே விளம்பரம் பத்திரிகைகளில் மீண்டும் வெளியானது.
அந்த விளம்பரத்தை பார்த்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டனர். அவர்களில் குறிப்பிட்ட சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிïஜெர்சியில் உள்ள நிïயார்க் விமான நிலையத்தில் இருந்து ரஜினி வெளியே வருவது போன்று ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அவருடன் அமெரிக்க இந்தியர்கள் நடந்து வருவது போன்று நடித்தனர்.
நிïயார்க்கில் உள்ள `வால் ஸ்டீரீட் பகுதியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதிலும் அவர்கள் நடித்தார் கள். ஒவ்வொருவரும் ரஜினி யுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
ரஜினி படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பல கிலோ மீட்டர் தொலைவில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் லீவு போட்டு விட்டு குடும்பத்துடன் வந்தார்கள். குழந்தைகளை யும் அழைத்து வந்திருந்தனர். ரஜினியுடன் முண்டியடித்து போட்டோ எடுத்தார்கள்.
Source : Maalaimalar
No comments:
Post a Comment