Thursday, August 02, 2007

கோவை : சந்திரமுகி சாதனையை முறியடித்தது சிவாஜி 40 தியேட்டரில் 50வது நாளை நெருங்குகிறது

கோவை : ரஜினி நடித்த "சிவாஜி' திரைப்படம், கோவை மாவட்டத்தில் 40 தியேட்டர்களில் 50வது நாளை நெருங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திரமுகி சாதனையை கடந்து, சிவாஜி இதுவரை ரூ.9 கோடி வசூல் செய்துள்ளது.ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம், ஜூன் 15ல் ரிலீசானது. கோவை மாவட்டத்தில் 54 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. நாளை மறுநாள் சிவாஜி ரிலீசாகி 50வது நாள். கோவை மாவட்டத்தில் திரையிடப்பட்ட 54 தியேட்டர்களில், 40 தியேட்டர்களில் சிவாஜி இன்னமும் ஓடுகிறது.சிவாஜி படத்துக்காக, ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளரும், ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முன்பணம் அளித்திருந்தனர். இப்பணம் 25 நாளிலேயே, அவர்களுக்கு திரும்ப கிடைத்துவிட்டது. அதன்பின், இதுநாள் வரை லாபமாக தியேட்டர் உரிமையாளருக்கு பணம் கொட்டிக் கொண்டுள்ளது.இதுபற்றி, "சக்தி பிலிம்ஸ்' நிர்வாகிகள் கூறியதாவது:ரஜினி நடித்த சந்திரமுகி படம் 20 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியது சாதனையாக கருதப்பட்டது. தற்போது, "சிவாஜி' 40 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடுகிறது. சந்திரமுகி சாதனையை "சிவாஜி' முறியடித்துள்ளது. கோவை, திருப்பூரில் 16 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.சந்திரமுகி 100வது நாளை தொட்டபோது, கோவை மாவட்டத்தில் ரூ.4.5 கோ வசூலானது. ஆனால், சிவாஜி படம் இப்போதே ரூ.9 கோடி வசூல் கொடுத்துள்ளது. குறைந்தபட்சம் 20 தியேட்டர்களில், சிவாஜி 100 நாட்கள் ஓடும் என எதிர்பார்க்கிறோம். சிவாஜி படம் திரையிட்ட முதல் இரண்டு வாரங்கள் திருட்டி விசிடி வரவில்லை. அதன்பின், விசிடி வந்தபோதிலும், தியேட்டர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. படம் பிரமாண்டமாக இருப்பதால், தியேட்டரில் பார்க்கவே மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு, சக்தி பிலிம்ஸ் நிர்வாகிகள் கூறினர்.
 

No comments: