Monday, December 18, 2006

சிவாஜி க்ளைமாக்ஸ் காட்சி 23ல் பெங்களூரில் ஷ¨ட்டிங்

சிவாஜி படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி பெங்களூரில் வருகிற 23ம் தேதி தொடங்கி ஜனவரி 2ம் தேதிவரை நடக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் ரஜினியும், ஸ்ரேயாவும் ஷ¨ட்டிங்கிற்காக அமெ ரிக்கா செல்கிறார்கள்.

ஏவிஎம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ÔசிவாஜிÕ படத்தின் இறுதிகட்ட ஷ¨ட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் மொட்டைத் தலையுடன் பிரெஞ்ச் தாடி வைத்து புதிய கெட்டப்பில் நடித்த காட்சிகளின் ஷ¨ட்டிங் புனே நகரில் கடந்த சில தினங்களாக நடந்தது. புனே படப்பிடிப்பு முடிந்து நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

மீண்டும் 23ம் தேதி பெங்களூரில் சிவாஜி ஷ¨ட்டிங் தொடங்குகிறது. 23ம் தேதிமுதல் 2ம் தேதிவரை நடைபெறும் ஷ¨ட்டிங்கில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன் உட்பட படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த க்ளைமாக்ஸ் காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.
க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதும் ரஜினிகாந்த், ஸ்ரேயா, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட சிலர் மட்டும் பெங்களூரில் இருந்தே அமெரிக்கா செல்கி றார்கள்.

அங்கே 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியபிறகு பொங்கல் திருநாள் அன்றுதான் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பிய அதே நாளில் இருந்து டப்பிங் பணிகளில் ஈடுபடுகிறார். டப்பிங், எடிட்டிங் பணிகளை முடித்து ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று சிவாஜி படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். 

 

No comments: