Sunday, December 24, 2006

சூப்பர்ஸ்டார் ரஜினி நியமித்த டிடெக்டிவ் டீம்!?

ரஜினியின் படம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால் அன்றிலிருந்தே அந்தப் படத்தின் கதை, செய்தி, போட்டோஸ்க்காக ஒட்டுமொத்த மீடியா ஆட்களும் அலைந்து திரிந்து தங்களுக்கு கிடைத்த தகவல்களை... முந்திக்கொண்டு சொல்வதில் அப்படியொரு வேகம் காட்டுவார்கள்.
 
அதேபோல்தான் சிவாஜிக்கும். ஆனால் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு தொடர்பான செய்தி எதுவும் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஏற்கனவே சொல்லி வைத்திருந்த்தார் ரஜினி. அதையும் மீறீ அவ்வப்போது செய்திகளும் போட்டோக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
சமீபத்தில் புனேயில் நடந்த கடைசிக்கட்ட படப்பிடிப்பின்போது ரஜினி மொட்டை போட்டு நடித்தார். படு ரகஸியமாக எடுக்கப்பட்ட இந்தக் காட்சியின் புகைப்படம் ஒரு நாளிதழில் வெளியாகிவிட்டது.
இதனால் அப்செட்டான ரஜினி..எப்படி ஸ்டில் வெளியே போனது என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும்... இரண்டு நாட்களுக்குள் எனக்கு கண்டுபிடித்து தரணும் என்று தனியார் துப்பறியும் நிருவனம் ஒன்றிற்கு அஸைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

ஹூ இஸ் தி ப்ளாக்‌ஷிப்!?

No comments: