Saturday, November 25, 2006

சிவாஜிக்காக மொட்டை போடுகிறார் ரஜினி

சென்னை,நவ.25: ÔசிவாஜிÕ படத்திற்காக ரஜினிகாந்த் மொட்டை போட முடிவு செய்திருக்கிறார்.

ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கி வரும் படம் ÔசிவாஜிÕ. ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்துக்காக ரஜினியுடன் நயன்தாரா ஆடும் பாடல் காட்சி சமீபத்தில் பூனாவில் படமாக்கப்பட்டது. பெல்ஜியம், பெங்களூர் உட்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் ரஜினிகாந்த் மொட்டைத் தலையுடன் தோன்ற வேண்டும். படத்திற்கு இந்த கெட்டப் அவசியம் என்பதால் ரஜினியுடன் இயக்குனர் ஷங்கர் காட்சியின் அவசியத்தை விளக்கியிருக்கிறார்.

காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரஜினி, மொட்டைத் தலையுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் 25ம் தேதி முதல் சிவாஜி ஷ¨ட்டிங் பெங்களூரில் நடக்கிறது. டிசம்பர் முதல் தேதி சென்னையில் நடக்கும் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், 2ம் தேதி சென்னையில் நடக்கும் Ôசொல்லி அடிப்பேன்Õ பட கேசட் ரிலீஸ் விழாவிலும் ரஜினி கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. அதன் பிறகு பெங்களூரில் தொடர்ந்து நடக்கும் சிவாஜி ஷ¨ட்டிங்கில் இந்த மொட்டை கெட்டப் காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்குகிறார்.