Saturday, June 09, 2007

Booking starts tomorrow

சிவாஜி படத்துக்கான முன்பதிவு உலகமெங்கும் நாளை முதல் ஆரம்பமாகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் நாளை அதிகாலை முதல் சிவாஜி தியேட்டர்களின் முன்னர் ரசிகர்கள் கூட்டம் திரண்டு நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிவாஜி வெளியான முதல் மூன்று தேதிகளுக்கான டிக்கெட்டுகளை தியேட்டர்களே பிளாக் செய்து வைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த ஞாயிறு படம் பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் மட்டுமே நாளை கிடைக்கும் என்று தெரிகிறது.


சிவாஜி திரைக்கு வர இன்னும் ஒரு வாரமே உள்ளது. படத்தை திரையிட கோலாகல ஏற்பாடுகள் படு வேகமாக நடந்து வருகின்றன. சென்னை நகரில் 11 தியேட்டர் வளாகங்களில் சிவாஜி திரையிடப்படவுள்ளது. சத்யம், ஆல்பர்ட், அபிராமி ஆகிய காம்பளக்ஸ்களிலும், பாரத், கமலா, ஏவி.எம்.ராஜேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. இதுதவிர புறநகர்களில் உள்ள 21 தியேட்டர்களிலும் சிவாஜி திரையிடப்படவுள்ளது.

No comments:

Blog Archive