Saturday, June 09, 2007

Sivaji in Andhra

'மலையாளக் கரையோரம்' மனோவை மறக்க முடியுமா? மீண்டும் மனோ, சூப்பர் ஸ்டாரின் சிவாஜியில். பின்னணிப் பாடகராக அல்ல; சூப்பர் ஸ்டாருக்காக தெலுங்கில் மாட்லாடுகிறார்.

பிரபல பின்னணிப் பாடகர் மனோ, சிவாஜி தெலுங்குப் படத்தில் ரஜினிகாந்த்துக்குக் குரல் கொடுத்துள்ளார்.

முத்து தெலுங்குக்குப் போனபோது ரஜினிக்காக குரல் கொடுத்தவர் பின்னணிப் பாடகர் மனோ. இப்போது சிவாஜிக்கும் கூட அவரேதான் பின்னணி பேசியுள்ளாராம்.

இதுகுறித்து கேட்டபோது மனோ சந்தோஷமாக பேசினார். ரஜினியின் குரலாக மக்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமான விஷயம். நான் அதிர்ஷ்டசாலிதான் என்று சொல்ல வேண்டும்.

ரஜினி சாரின் குரலுக்கு எனது குரல் பொருத்தமாக அமைந்திருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். ரஜினிக்காக குரல் கொடுத்துப் பேசுவதில் எனக்கு எந்த சிரமுமம் இருக்கவில்லை. சிவாஜி டப்பிங் முடிந்த பின்னர் ரஜினி சாரிடமிருந்து போன் வந்தது. என்னைப் பாராட்டிப் பேசினார் என்றார் மனோ.

No comments:

Blog Archive