Sunday, August 20, 2006

சிவாஜி படத்துக்காக ‘ராக்’ டான்ஸ் ஆடினார் ரஜினி

ராகவா லாரன்ஸ் தகவல்

சிவாஜி படத்தில் ரஜினி 'ராக்' என்ற மேற்கத்திய நடனம் ஆடி அசத்தியிருப்பதாக டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கூறினார்.

சிவாஜி படத்தில் ரஜினிக்கு நடனம் அமைத்தது குறித்து Ôதினகரன்Õ நிருபரிடம் அவர் மேலும் கூறியதாவது: இயக்குனர் ஷங்கரின் படத்துக்கு நடனம் அமைக்கும் ஆசை இருந்தது. அதை பலமுறை அவரிடம் தெரிவித்திருக்கிறேன்.

முனிÕ படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, ஷங்கர் அழைத்தார். ÔசிவாஜிÕயில் ரஜினிக்கு நடனம் அமைக¢க சொன்னபோது, நெகிழ்ந்து போனேன்.

ரஜினிதான் என்னை சினிமாவில் கொண்டு வந்தவர். பின்னி மில்லில் அந்த பாடல் படமாக்கப்பட்டது. மேற்கத்திய இசையுடன் கூடிய பாடலுக்கு மேற்கத்திய பாணியிலேயே நடனம் அமைத்தேன்.
ஒருமுறை நான் ஆடுவதை பார்த்துவிட்டு, சிரமமான அசைவுகளையும் சுலபமாக செய்து காட்டினார் ரஜினி.

இயக்குனராகிவிட்டாலும் தொடர்ந்து நடனத்திலும் கவனம் செலுத்துகிறேன். முனி படத்தை அடுத்து, தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்கும் படத்தை இயக்குவேன். தமிழிலும் மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை இயக்குவேன். இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.

No comments: