Sunday, August 13, 2006

Sivaji News in Kumudam

 
கோடம்பாக்கத்தின் மூன்றெழுத்து மந்திரம்_‘சிவாஜி’. ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது, ‘ஏதாவது ‘சிவாஜி’ நியூஸ் உண்டா?’ என்று ஆர்வத்துடன் கேட்கத் தவறுவதில்லை. ஆனால், பதில்தான் கிடைப்பதில்ல.
 
நாம் உளவு பார்த்ததில் கிடைத்த தகவல்களை வாசகர்களுக்குத் தருகிறோம்.
 
« முதல் கட்டமாக சென்னை, டெல்லி, ஸ்பெயின் என பல லொகேஷன்களில் ஷ¨ட்டிங் பரபரப்பாக நடந்து முடித்திருக்கிறது. நவம்பர் மாதம் இறுதிவரை ஷ¨ட்டிங் தொடர இருக்கிறது. ஷ¨ட்டிங் முடிந்ததும் மூன்று மாதங்கள் வரை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கவிருக்கிறது. ஏப்ரல் பதினான்காம் தேதி தமிழ்ப் புத்தாண்டுக்கு விருந்து படைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
 
« ஆர்க்கிடெக்டாக தோன்றும் ரஜினி சமூக சேவையில் ஈடுபடுவது போல பல காட்சிகள் இடம் பெறுகிறது. ரஜினியின் மனதில் இருக்கும் ஆசைகளையும், சமூகத்திற்கு செய்ய விரும்புகிற விஷயங்களையும் காட்சிகளாக வடிவமைத்து இருக்கிறார் ‘மெகா டைரக்டர்’ ஷங்கர்.
 
« மக்களிடம் ரஜினிக்குக் கிடைக்கும் வரவேற்பை மிகப் பிரம்மாண்டமாக காட்ட, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஷங்கர். ‘இந்தியன்’ படத்தில் இந்தியன் தாத்தா ஸ்டைலில் இளைஞர்கள் டிரெஸ் பண்ணி கொண்டு வரும் காட்சியைப் போல, ரஜினியின் படம் ப்ரிண்ட் பண்ணிய டி_ஷர்ட்டுகள், தொப்பிகளில் மக்கள் ஆர்ப்பரிப்பது போல காட்சிகள், இடம் பெறுகிறது.
 
« படையப்பாவில் வரும் சௌந்தர்யா கதாபாத்திரத்தைப் போலவே கலாசாரமுள்ள சாதாரண குடும்ப பெண்ணாக நடிக்கிறார் ஸ்ரேயா. ரஜினிக்கும், ஸ்ரேயாவுக்கும் வழக்கம் போல காதல் மலர்கிறது. உடனே இந்த ஜோடி கோலிவுட் ஸ்டைலில் டூயட் பாட உலகைச்சுற்றுகிறார்கள். இதற்காக ரஜினியும், ஸ்ரேயாவும், ‘உலகின் ஏழு அதிசயங்களை’ பார்க்க ஒரு ட்ரிப் அடிப்பதாக கதை நகர்கிறது. இந்தக் காட்சியின் தொடர்பாகதான், சமீபத்தில் ஸ்பெயினுக்குச் சென்று ஒரு பாடலை ஷ¨ட் செய்திருக்கிறார்கள்.
 
« ஸ்பெயினில் ஷ¨ட்டிங் நடந்த போது, இந்திய சினிமாவா என்று வேடிக்கைப் பார்க்க பெருங்கூட்டம் கூடிவிட்டது. அங்கு வந்த மக்கள் போட்டோ, வீடியோஎன ஷ¨ட் செய்துவிட்டார்கள் இதனால் சிவாஜி யூனிட் ரொம்ப திணறியிருக்கிறது. அங்குள்ள மக்கள் படமெடுப்பதை தடுக்கலாம் என்று நினைத்து, யூனிட் ஆட்கள் அவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதே நேரம் மக்களை ஷ¨ட்டிங் என்ற பெயரில் டிஸ்டர்ப் செய்கிறார்கள் என்று புகார் கொடுத்தால், ஷ¨ட்டிங்கையே கேன்ஸல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இதன் பலனாகவே இக்னாஸியோ பெரேஸ் என்பவர் எடுத்த படங்கள் இன்டர்நெட் மூலமாக வெளிவந்தன.
 
« ஸ்பெயினில் ஸ்ரேயாவுடன் டூயட் பாடிய ரஜினிக்கு மற்றொரு கலக்கல் டூயட் பாடலும் இருக்கிறது. ‘மர்டர்’ படத்தில் தனது கவர்ச்சியால் தத்தளிக்க வைத்த மல்லிகா ஷெராவத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார்கள்.
 
« ஒரு சண்டைக் காட்சியின் போது ஒரு ரிஸ்க்கான ஷாட்டில் ரஜினியின் தோள்பட்டையிலிருந்து, மூட்டு லேசாக இறங்கி விட்டது. ‘பாபா’ படத்தின் ஒரு பாடல் காட்சியின் போதும், இதே போல் ஒரு கை இறங்கியது நினைவிருக்கலாம். கை இறங்கியதால் ரஜினி வலியால் துடித்தாலும், தன்னால் ஷ¨ட்டிங் தடைப்பட கூடாது என்று தொடர்ந்து நடித்திருக்கிறார்.
 
« படத்தின் ஒரு சண்டைக்காட்சிக்காக ரஜினி அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இருபத்தைந்து பேரை ஒரே அடியில் அடித்து வீழ்த்துகிற மாதிரியான காட்சியில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.
 
« படத்தைப் பற்றிய தகவல்கள் ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கப்படுகிறது. எடிட்டரான ஆண்டனி இதுவரை எடுத்த காட்சிகளை, யாரையும் தன்னோடு கூடவே வைத்து கொள்ளாமல், தன்னந்தனியாக எடிட் செய்து கொண்டிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
 
_ராமஜேஸ்வி


Do you Yahoo!?
Next-gen email? Have it all with the all-new Yahoo! Mail Beta.