Friday, January 05, 2007

சிவாஜியில் 'மேஜிக் பஸ்!'

காதலனில் டிரான்ஸ்பரண்ட் பஸ்ஸை காட்டிய ஷங்கர், சிவாஜியில் மேஜிக் பஸ்ஸை ஓட விடுகிறார்.

படத்துக்குப் படம் பிரமாண்ட பரவசத்தைக் காட்டுவதில் ஷங்கர் 'கில்லாடியோன் கா கில்லாடி.' காதலனின் கண்ணாடி பஸ்ஸைக் காட்டி ரசிகர்களை அசத்தினார். முதல்வனில் பிரமாண்ட பாம்புகளை கிராபிக்ஸில் ஓட விட்டு வெளுத்து வாங்கினார்.

அந்நியனில் பாட்டுக்கு பாட்டு படு வித்தியாசமான லொகேசன்களைக் காட்டினார். நல்ல லொகேசன் கிடைக்காதபட்சத்தில் மலைக்கும், ரோட்டுக்கும் கூட பெயிண்ட் அடித்து மிரட்டினார்.

அந்த வகையில் இப்போது ரஜினியின் சிவாஜியில் மேஜிக் பஸ் ஒன்று இடம் பெறுகிறதாம். வெளியிலிருந்து பார்க்க சாதாரண ஆம்னி பஸ் போலவே இருக்குமாம். ஆனால் அது ஒரு நடமாடும் ஆஸ்பத்திரியாம்.

காட்சிப்படி, ரஜினியை வில்லன்கள் வெளுத்து எடுத்து விடுவார்கள். காயமடைந்த ரஜினியை, ரகுவரன் மீட்கிறார். அவரை காப்பாற்ற மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டும். வில்லன்கள் கண்ணில் படாமல் கூட்டிக் கொண்டு போக வேண்டும்.

எப்படி என்று யோசிக்கிறார் ரகுவரன். ஐடியா பிறக்கிறது. ஒரு ஆம்னி பஸ்ஸைப் பிடித்து மருத்துவமனையாக மாற்றுகிறார். அதில் ரஜினியை ஏற்றிக் கொள்கிறார். பஸ் சாலைகளில் ஓடுகிறது, உள்ளே ரஜினிக்கு சிகிச்சை நடக்கிறது.

தேவையான போது அதை வழக்கமான பஸ்ஸாகவும் மாற்றிக் கொள்ளலாம். அவசரத்திற்கு மருத்துவமனையாகவும் மாற்றி விடலாம். இப்படிப்பட்ட ஒரு சூப்பர் பஸ்ஸில்தான் ரஜினிக்கு சிகிச்சை கொடுத்து காப்பாற்றுகிறாராம் ரகுவரன்.

செட் போட்டு இந்த சூப்பர் பஸ் காட்சியை சூப்பர் ஸ்டாரை வைத்து சுட்டுள்ளார் ஷங்கர்.

இந்தியன் தாதாவுக்க ஆம்புலன்ஸ் மாதிரி.. ரஜினிக்கு பஸ்!

போட்டும் ரைட்..
 

No comments: