Wednesday, January 03, 2007

சூப்பர் ஸ்டார் கோபம்!

சூப்பர்! பின் வரும் பாராக்களில் நீங்கள் படிக்க போகும் செய்திக்கு நீங்களே சொல்லப் போகும் பாராட்டு வார்த்தைகள்தான் மேலே நாம் சொன்ன Õசூப்பர்!Õ இந்த சூப்பர் விஷயத்தின் கதாநாயகன்? வேறு யார்? நம்ப சூப்பர் ஸ்டாரேதான்.

சிவாஜி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனாவில் நடந்தது. சென்னையில் இருந்து புனாவிற்கு டைரக்டர், கேமிராமேன், டெக்னீஷியன்கள் புடை சூழ கிளம்பி போனார்கள். முன்னதாக அவர்கள் அனைவருக்கும் அவரவர் ரேஞ்சிற்கு ஏற்ப ஓட்டலில் அறைகள் தயார் செய்யப்பட்டிருந்தன. டைரக்டர் ஷங்கர், கேமிராமேன் கே.வி.ஆனந்த், கதாநாயகி ஸ்ரேயா ஆகியோருக்கு நட்சத்திர ஓட்டலில் ஒதுக்கப்பட்டிருந்த அறை வாடகை ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் ருபாய்கள். (இதர வரிகள் தனி) ரஜினிக்கும் அதே ஓட்டலில்தான் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

முதல் நாளே ரஜினியை சந்தித்த தயாரிப்பு நிர்வாகி அவருக்கு குறிப்பிட்ட ஓட்டலில் ரூம் போட்டிருப்பதாக சொல்ல, அதிர்ச்சியடைந்தார் ரஜினி. அந்த ஓட்டலில் வாடகை அதிகமாச்சே? சரவணன் சார் என்ன அவ்வளவு பெரிய வாடகைக்கா எனக்கு ரூம் போட சொன்னார்? ஏன் இப்படி அனவாசியமாக செலவு செய்யறீங்க? எனக்கு சாதாரண கெஸ்ட் ஹவுசில் 3500 ரூபாய் வாடகையில் ஒரு ரூம் போடுங்க. போதும் என்று சொல்லிவிட்டார். ரஜினி சொல்லை தட்ட முடியுமா?

அவர் சொன்ன மாதிரியே சாதரணமான கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை தேடி பிடித்து ரஜினியை தங்க வைத்தாராம் தயாரிப்பு நிர்வாகி. ரஜினியின் பக்கத்து ரூமில் தங்கியிருந்தவர்கள் எல்லாம் படத்தின் இரண்டாம் தர டெக்னீஷியன்கள். ரஜினியின் எளிமையை பார்த்து வியக்கும் அவர்கள் சொன்ன இன்னொரு தகவல்....

நாங்கள் சாப்பிட்ட யூனிட் சாப்பாட்டைதான் ரஜினி சாரும் சாப்பிட்டார். எல்லாருக்கும் போலவே அவர் ரூம் வாசலிலும் சாப்பாட்டு கேரியரை வச்சிட்டு போயிடுவார் புரடக்ஷன் ஆள். அதை எடுத்து சாப்பிட்டுவிட்டு வெறும் கேரியரை ரூமிற்கு வெளியே வச்சிடுவார் ரஜினி சார். அவர் அறைக்கு பக்கத்து அறையில் தங்கினோம் என்பதே எங்களுக்கு பெருமை என்கிறார்கள் அந்த தொழிலாளர்கள்.

மேலோட்டமா கிடைக்கிறது கண்ணாடி துகள்கள். ரொம்ப அடி மட்டத்தில்தான் கிடைக்கும் வைரங்களும், வைடூர்யங்களும்! சரிதானே?

http://www.tamilanywhere.com/CINENEWS/Hotnews/2006/december/301206.asp

No comments: