Thursday, January 25, 2007

படப்பிடிப்பு விரைவில் முடிகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் சிவாஜி படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்திற்கு நம் நாடு மட்டுமல்ல ஜப்பான், பிரான்ஸ், கனடா போன்ற வெளிநாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஜப்பான் ரசிகர்கள் சிவாஜி படம் ரிலீசாகும் நாளை திருவிழா போல் நடத்த தடபுடல் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

சிவாஜி படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன. ஒரு புறம் `டப்பிங்' செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இன்னும் ஒரு சில காட்சிகள்தான் எடுக்க வேண்டியது உள்ளது. இது தவிர ஒரே ஒரு பாடல் காட்சியும் விரைவில் எடுக்கப்படுகிறது.

இப்பாடல் காட்சியை வெளிநாடுகளில் எடுக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளார். இதற்காக ரஜினி-ஸ்ரேயா, மற்றும் படக்குழுவினர் விரைவில் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அந்த பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெறும் இடங்களை ரகசியமாக வைத்துள்ளார்.

படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை முன்கூட்டியே வெளியிட்டால் ரஜினி ரசிகர்கள் அங்கு படையெடுத்து வருகிறார்கள். இது தவிர ஒரு சிலர் செல்போன் கேமராவால் ரஜினியை படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்டு வருகிறார்கள் இதை தவிர்ப் பதற்குதான் எந்தெந்த நாடுகளில் படப் பிடிப்பு நடை பெறும் என்பதை தெரிவிக்க சங்கர் மறுத்து விடுவதாக `சிவாஜி' படக்குழுவினர் தெரி வித்தனர்.

சமீபத்தில் சென்னை தி.நகரில் நடிகர் சுமன் நடித்த காட்சிகளை சங்கர் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சியில் ரஜினி இடம் பெறவில்லை.

ஆனாலும் அவர் திடீரென அங்கு சென்றார். ரஜினியைப் பார்த்ததும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி.

படப்பிடிப்புத்தளத்துக்கு சென்ற அவர் ஓரமாக அமர்ந்து படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் படக்குழுவினரை தனித்தனியாக அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

இயக்குனர் சங்கரையும் அழைத்து அவரு டன் போட்டோ எடுத் தார். படப்பிடிப்பு முடியும் வரை அங்கிருந்த ரஜினி லைட்மேன், சமை யல் செய்பவர்கள், மேக்- அப்மேன்... என்று அனை வரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments: