Tuesday, January 09, 2007

ஸ்பெயினில் ரஜினி அலை வியக்கிறார் ஸ்ரேயா

சென்னை, ஜன.9: ஸ்பெயின் நாட்டிலும் ரஜினிக்கு இருக்கும் மவுசு குறித்து நெகிழ்ச்சி அடைகிறார் நடிகை ஸ்ரேயா.
ÔசிவாஜிÕ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. சில மாதங்களுக்கு முன் ஸ்பெயினில் இவர்கள் ஆடிப்பாடும் காட்சி படமானது. இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:

ரஜினியுடன் ஜோடி சேர வேண்டும் என்பதுதான் தென்னிந்திய நடிகைகளின் கனவு. அது எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு காட்சியை முடித்துவிட்டு வரும்போது, நன்றாக இருந்தால் ரஜின¤ பாராட்டுவார். அவருடன் ஸ்பெயின் நாட்டில் ÔசிவாஜிÕக்காக ஆடியது மறக்க முடியாத அனுபவம்.

அந்த காட்சியை படமாக¢கும்போது, அங்குள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் பலர் வந்துவிட்டனர். மறுநாள் அங்குள்ள பத்து பத்திரிகைகளில் ரஜினியின் படம், முதல் பக்கத்தில் வெளியானது. அதில் ஒரே படத்தில் மட¢டும் நான் இருந்தேன். ரஜினிக்கு இருக்கும் அலையை நினைத்து பிரமித்துப் போனேன். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தும் முன்னணிக்கு வராதது வருத்தம்தான். ஆனால் ÔசிவாஜிÕ படத்துக்கு பிறகு எனது முதல் இடத்துக்கான கனவு நிறைவேறும்.
 

No comments: