Wednesday, January 31, 2007

கண்டக்டர் வேலைக்கு போ வசனம்: சிவாஜி படப்பிடிப்பில் ரஜினி பெருந்தன்மை

ரஜினி நடிக்கும் சிவாஜி படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மெகா பட்ஜெட்டில் ஏ.வி.எம். நிறுவனம் இதை தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

சமீபத்தில் சிவாஜி படப் பிடிப்பு குழுவினரை உலுக்கிய ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

சிவாஜியில் ரஜினி பெரிய கோடீஸ்வரர். அவரது சொத்தை வில்லன் சுமன் ஏமாற்றி பிடுங்குகிறார்.

அப்போது ரஜினியை பார்த்து போபோ இனிமேல் வேறு வேலைக்கு போ கூலி வேலையோ கண்டக்டர் வேலையோ செஞ்சி பிழைச் சுக்கோ என்று சுமன் பேசுவது போல் வசனம் எழுதப்பட்டு இருந்தது. இந்த வசனத்தை `ரஜினி' ஏற்பாரா என்ற தயக்கம் டைரக்டர் ஷங்கருக்கு இருந்தது. இதுபற்றி ரஜினி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வசனம் இடம் பெறும் காட்சிகளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துச் செல்லப்பட்டது.

உடனே ரஜினி பெருந் தன்மையாக அந்த வசனம் இடம் பெற அனுமதி அளித் தார். எனக்கு கேரக்டர் தான் முக்கியம் அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவேன் என்றார். இதை கேட்டதும் ஷங்கர் மகிழ்ந்தார்.

அதன் பிறகு `ஷாட்' தொடங்கியது. சுமனிடம் அந்த வசனத்தை சொல்லி பேசச் சொன்னார்கள். சுமன் பேச மறுத்துவிட்டார். கண்டக்டர் வேலைக்கு போ என்று பேச மாட்டேன் எனக் கூறினார். ரஜினி அவரை சமாதானப்படுத்தினார் நடிப்பு தானே பேசுங்கள் என்று கூறினார். அதன் பிறகு ஓரளவு சமாதானமாகி அவ்வசனத்தை சுமன் பேசினார். அந்த காட்சி படப்பிடிப்பு குழுவினரை உலுக்கியது. ஒரு வித மன அழுத்தத்தோடு பார்ëத்துக் கொண்டிருந்தனர்.

இந்த திருப்பமான காட்சி படத்தின் இடைவேளையில் இடம் பெறுகிறது.
`சிவாஜி' பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. 7 பாடல்கள் இதில் உள்ளன. வாஜிவா சிவாஜி என்ற பாடல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் கோடிக் கணக்கான செலவில் `செட்' போட்டு படமாக்கப்பட்டது. படத்தில் வரும் `டைட்டில் பாடல் புனேயில் எடுக்கப்பட்டது. ரஜினியுடன் நயன்தாரா இதில் ஆடினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரகாட்ட குழுவினரையும் திரட்டி போய் இதில் ஆட வைத்தனர்.

இன்னொரு `டூயட்' பாடல் ஸ்பெயினில் படமாக்கப் பட்டது. ரஜினியும் ëஸ்ரேயாவும் துணை நடிகர், நடிகைகளுடன் இதில் ஆடினார்கள்.
சென்னை பி அன்ட் சி மில்லில் ஒரு பாடல் காட்சியை வெனிஸ்நகர் செட் அமைத்து எடுத்தனர். இதில் வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து நடனமாட வைத்தனர்.



Never Miss an Email
Stay connected with Yahoo! Mail on your mobile. Get started!



Need Mail bonding?
Go to the Yahoo! Mail Q&A for great tips from Yahoo! Answers users.

No comments: