மீண்டும் 'சிவாஜி.' மீண்டும் ஃபாலோ_அப். அடடா திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா என முணுமுணுக்காதீங்க. 'சிவாஜி' ரிலீஸ் நெருங்கியாச்சு. பப்ளிசிட்டி வேணும். அதனால இனிமேல் ஷங்கர் எல்லோர்க்கும் பேட்டி கொடுப்பார். 'எக்ஸ்க்ளூஸிவ்' என்று சொல்லி படங்கள் கொடுப்பார். ஸோ, இனிமேல் ஸீஷீ யீஷீறீறீஷீஷ்uஜீs, ஸீஷீ ஷ்க்ஷீவீtமீuஜீs. சரி, இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.
பரபரப்பாகத் தொடங்கி, சைலண்ட்டாக ஷ¨ட்டிங் நடத்தி, பிரமாண்டமாக ஏறக்குறைய முழுப்படத்தையும் முடித்து விட்டார் ஷங்கர். படத்தின் முதல் பாதி முழுமையாகத் தயாராகி விட்டது. எடிட்டர் ஆண்டனி மிக ரகசியமாக தன்னந்தனியாக எடிட்டிங் வேலைகளை முடித்திருக்கிறார். முதல் பாதியை ரஷ் போட்டுப் பார்த்த ரஜினி, குஷியில் அடித்த கமெண்ட்: ''படம் சூப்பரா வந்திருக்கு. எவ்வளவோ விஷயங்களுக்கு மத்தியில என்னையும் கலகலன்னு சிரிக்க வைச்சிட்டீங்க''. இதனால் ஷங்கர் தரப்பு உற்சாகத்தில் மிதக்கிறது.
'சிவாஜி'யைப் பொறுத்தவரை ரஜினியின் பாராட்டை தட்டிச் சென்ற மற்றொருவர், தமிழில் ரீ_எண்ட்ரியாகியிருக்கும் சுமன். நீண்ட இடைவெளிக்குப் பின்பு சிவாஜியை எதிர்க்கும் வில்லனாக தமிழுக்கு வந்துவிட்டார். சுமன் சம்பந்தபட்டப் காட்சிகள் பரபரவென வந்திருப்பதால் சந்தோஷமான ரஜினி, சுமனுக்கு தனியாக ஒரு ஸ்பெஷல் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ரஜினியும், சுமனும் மோதுகிற ஒரு ஆக்ஷன் காட்சியை பெங்களூரில் எடுத்திருக்கிறார்கள். முக்கியமான சாலையில் புத்தம் புது கரன்ஸி நோட்டுகளை பறக்க விட்டு அதற்கு நடுவே இருவரையும் மோதவிட்டு எடுத்திருக்கும் காட்சியை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.
பணத்தை வாரியிறைப்பதால் பட்ஜெட் எவ்வளவு எனத் தெரியாமல் ஷ¨ட்டிங் ஜரூராகப் போய்க் கொண்டிருக்கிறது. இதனாலேயே படத்தை இன்னும் பிஸினஸ் செய்யாமல் வைத்திருக்கிறார்களாம். படம் முழுமையாக முடிந்ததும், பட்ஜெட் எவ்வளவு என முடிவான பிறகே பிஸினஸில் இறங்குகிறார்களாம். ஆனால் இதற்கிடையில் படத்தை விலைக்கு வாங்க தென்னிந்தியாவின் மிகப்பெரிய விஷ§வல் மீடியா நிறுவனமும், பொழுது போக்குத் துறையில் களமிறங்கியிருக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமும், மூன்றெழுத்து ஆன்மிகத் துறவியின் நிறுவனமும், விருது பெயரிலான பிரமாண்டமான தயாரிப்பாளரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் 'சிவாஜி'யின் பப்ளிசிட்டியை புதுமையாகவும் வித்தியாசமாகவும் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஷங்கரின் தரப்பு. அதாவது சிவாஜி படம் பற்றி பத்திரிகைகளில் வந்த பல கதைகளை வெளியிட்டு, 'சிவாஜி கதை இந்தக் கதை அல்ல. வேறு கதை. உண்மை தெரிய படம் பார்க்க வாங்க' என்று விளம்பரப்படுத்தும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறதாம்.
இதற்கிடையில், கதையின்படி வில்லன் கும்பலால் ஏமாற்றப்படும் ரஜினி, புதிதாக கல்லூரிகள் கட்டுவதற்காக வங்கிக்குச் சென்று கடனுதவி கேட்பது போன்ற காட்சி இடம் பெறுகிறதாம். வங்கிக்குச் செல்லும் ரஜினியிடம் அந்த வங்கி கடன் கொடுக்காமல் கையை விரிப்பது போல காட்சி அமைக்கப்பட்டு உள்ளதாம். இதை மோப்பம் பிடித்த மேலிடத்து வங்கி வட்டாரம், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய மத்திய அமைச்சரிடம் தெரிவித்திருக்கிறதாம். அந்தக் காட்சியைப் பார்த்தால் வங்கிகள் மீது தவறான எண்ணம் வரலாம் என்று நினைப்பதால், அந்தக் காட்சியில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக சிவாஜி யூனிட்டில் புதிய கிசுகிசு உலா வருகிறது.
அதுசரி, அட்டையில் 'ரஜினியின் வாய்ஸ் ரகசியம்' என்று போட்டு விட்டு வேறு ஏதேதோ சொல்றீங்களே என்று உங்க மனசு முணுமுணுப்பது கேட்கிறது. ரஜினியின் ஸ்பெஷாலிட்டிகளில் அவரோட வாய்ஸ§ம் ஒன்று. கணீரென்று அடித் தொண்டையிலிருந்து விர்ரென்று கிளம்பி வந்து கலக்கும் அந்த பேஸ் வாய்ஸ்.
இந்த வாய்ஸை சும்மா பெற்று விடவில்லை ரஜினி. இதற்கென தான் நடிக்க வந்த போதே தனிப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். அந்த சீக்ரெட்டான பயிற்சிதான் ரஜினி வாய்ஸின் ரகசியம். தினமும் காலையில் எழுந்தவுடன் சீரகத்துடன் கொதிக்க வைத்த வெந்நீரை வாயில் சிறிது நேரம் வைத்தபடியே கொப்பளிக்க வேண்டும். இதேபோல் திரும்பத் திரும்ப சிலமுறை செய்ய வேண்டும். பிறகு அடித் தொண்டையை இறுக்கமாக வைத்தபடி நம்முடைய பேஸ் வாய்ஸில் பேச வேண்டும். தினமும் இதேபோல சில நிமிடங்கள் பேசினால், இப்பயிற்சி மூலம் கச்சிதமான குரல் வளம் தானாகவே வந்துவிடும்.
என்ன, அட்டைப் படத்தில் குறிப்பிட்ட விஷயத்தையும் சொல்லியாச்சா. இனிமேல் நீங்களும் முயற்சி செய்து பாருங்க. அப்புறம் வாய்ஸ் கொடுங்க!
No comments:
Post a Comment