Wednesday, March 28, 2007

3 பாட்டு 70 ரூபாய் ‘சிவாஜி’ திருட்டு சிடி பரபரப்பு விற்பனை

சென்னை, மார்ச் 28: 'சிவாஜி' படத்தின் திருட்டு பாடல் சிடிக்கள் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. 3 பாடல்கள் கொண்ட சிடி 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ரஜினி நடித்துள்ள 'சிவாஜி' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதை போலவே அதன் பாடல்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு படத்தின் பாடல்கள் வெளிவந்த பிறகுதான் திருட்டு சிடிக்கள் வெளியாகும்.

ஆனால் 'சிவாஜி' படத்தின் பாடல்கள் வெளிவருவதற்கு முன்பே 3 பாடல்கள் இணைய தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. இதை சிடியில் பதிவு செய்து விற்று வருகிறார்கள்.

சென்னையின் முக்கியமான சில பகுதிகளில் இது திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. 3 பாடல்கள் கொண்ட சிடி 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அறிமுகமானவர்களுக்கு 50 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.

இந்த சிடியின் மேல் படத்தின் பெயரோ படமோ இடம் பெற்றிருக்காது. பார்க்க பதிவு செய்யப்படாத சிடி போலவே காட்சியளிக்கிறது.

சிவாஜியின் பாடல்கள் ஏப்ரல் 4-ம் தேதிதான் முறைப்படி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Source : Dinakaran

No comments:

Blog Archive