சூடம் கொளுத்தி, பூசணிக்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை,மார்ச்.19-
ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வருகிறது. சென்னையில் ஆல்பர்ட், அபிராமி, சாந்தம், உதயம், ஏவி.எம்.ராஜேஸ்வரி உள்பட 12 திரையரங்கில் சிவாஜி படம் திரையிடப்படுகின்றன.
சிவாஜி
ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் ரசிகர்களுடையே பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி திரைக்கு வர இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் சென்னையில் பல பகுதியில் சிவாஜி படத்தை வரவேற்று போஸ்டர்களை ஓட்டி வருகின்றனர்.
அமாவாசை தினமான நேற்று சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளை சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் 100 பேர் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் 50 அடி நீளமுள்ள ரஜினிகாந்த் டிஜிட்டல் பேனரை வைத்து உள்ளனர்.
வெடி வெடித்து...
இந்த பேனரில் மன்னனுக்கு தமிழில் இது 100-வது படம். இயக்கிய டைரக்டர்கள் 43 என்று எழுதப்பட்டுள்ளது. அதன் கீழே சிவாஜியின் தரிசனத்திற்கு காத்திருக்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.
பேனர் அமைக்கும் பணியை ரஜினிகாந்த் மன்ற மாவட்ட பொருளாளர் ராமதாஸ் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
நிர்வாகிகள் ரவி, முருகன், குணசேகர், செல்வம், ரஜினி செல்வன் உள்பட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர் முன்பு சூடம் கொளுத்தி, பூசனிக்காய் உடைத்தனர். பின்னர் அவர்கள் ஆல்பர்ட் திரையரங்கு முன்பு சரவெடிகளை வெடித்தனர்.
தினத்தந்தி பாராட்டி...
இது பற்றி ரஜினிகாந்த் மன்ற நிர்வாகி ரஜினிசெல்வன் கூறும்போது, 'சிவாஜி திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வருகிறது. இன்று அமாவாசை அதனால் பேனர் வைக்கும் பணியை தொடங்கி விட்டோம். ஆல்பர்ட் திரையரங்களில் 50 அடியில் ரஜினிகாந்த் பேனரை வைத்து உள்ளோம். எங்கள் தலைவரின் வரலாற்றை தொகுத்து வெளியிடும் தினத்தந்தியை பாராட்டி உதயம் திரையரங்கில் 100 அடி டிஜிட்டல் பேனரை வைக்க உள்ளோம். மேலும் 60, 120 அடியில் ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கில் வைக்க இருக்கிறோம். சிவாஜி படம் வெளி வரும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி' என்றார்.
No comments:
Post a Comment