Thursday, March 29, 2007

சிவாஜி சொகுசு பஸ் விரைவில் ஏலம்

சிவாஜி படத்தில் பயன்படுத்தப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன சொகுசு பஸ் விரைவில் ஏலம் விடப்படுகிறது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ÔசிவாஜிÕ. ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்தப் படத்துக்காகவே நவீன பஸ் ஒன்றை வெளிநாட்டில் தயாரித்துள்ளனர். பல லட்சம் ரூபாய் செலவில் உருவான இந்த பஸ்சில், வீடு போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது. நான்கு அறைகள், மருத்துவ வசதிகள், மினி தியேட்டர், வீடியோ கான்ஃபிரன்ஸ் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

படத்தில், ரஜினியின் குடும்பத்தினரை வில்லன் கூட்டம் கொலை செய்கிறது. ரஜினியையும் துப்பாக்கியால் சுடுகின்றனர். குண்டு காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ரஜினியை அவரது நண்பரான ரகுவரன் காப்பாற்றுகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித¢தால் வில்லன் கூட்டத்துக்கு தெரிந்துவிடும் என்பதால், இந்த பஸ்சை ரகுவரன் ஏற்பாடு செய்கிறார். பஸ்சில் வைத்து ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் பஸ்சை நிறுத்தி வைத்தால் சந்தேகம் வரும் என்பதால் நகரில் பஸ் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்படியே ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படும். ரஜினி இறந்துவிட்டதாக வில்லன் கூட்டம் நினைத்துக் கொண்டிருக்கும்போது, காயத்தில் இருந்து குணமடையும் ரஜினி, இந்த பஸ்சில் இருந்தபடியே வில்லன் கூட்டத்தை அழிக்க திட்டம் போடுகிறார்.

கதைப்படி ரஜினி தொழிலதிபர் என்பதால், பல லட்சம் மதிப்புள்ள இந்த பஸ்சை படத்தில் பயன்படுத்தியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் இப்போது இந்த பஸ் ஏலம் விடப்பட உள்ளது. ஏற்கனவே ரஜினி நடித்த ÔகழுகுÕ படத்தில் நவீன பஸ்சை பயன்படுத்தியிருந்தனர். அந்த பஸ்சில் கிச்சன், கட்டில், லைப்ரரி, டாய்லெட், பைக் என சகல வசதிகளும் இருக்கும். இப்போது 'சிவாஜி' படத்தில் அதைவிட பல மடங்கு நவீன வசதிகள் கொண்ட பஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது
 
Source : Tamilmurasu


Don't pick lemons.
See all the new 2007 cars at Yahoo! Autos.

No comments:

Blog Archive