Sunday, March 25, 2007

Tamil Murasu : Sivaji Release Date Rumours ...

உச்ச நடிகரோட பட ரிலீசுல எல்லாரும் ஆர்வமா இருக்குற போது, பட இயக்குனரோ தமிழுக்கு ஒரு மாதிரி தெலுங்குக்கு ஒரு மாதிரின்னு படத்தை ரெடி பண்ணிகிட்டிருக்காரு... ஒரு பாடல் காட்சியில எம்ஜிஆர், சிவாஜி, கமல்னு சீனியர் நடிகர்கள் மாதிரி வேஷம் கட்டின உச்ச நடிகரு, அதே பாடல் காட்சியை தெலுங்குல மாத்தும்போது என்டிஆர், சிரஞ்சீவின்னு தெலுங்கு பிரபலங்கள் மாதிரி வேஷம்போட்டு உச்ச நடிகர் ஆடிப்பாடுற சீன்களை மட்டும் 4 நாள் படம் புடிக்க திட்டம் வச்சிருக்காங்க... இதுக்காக ஸ்டுடியோவுல ஸ்பெஷலா செட் போட்டுகிட்டிருக்காங்க... ஏப்ரல் 9ம் தேதிலயிருந்து இந்த பாட்டை ரகசியமா படம்புடிச்சி தெலுங்கு பதிப்புல சேர்க்கப்பபோறங்க... தெலுங்கு பதிப்புல சேர்க்கப்பபோறாங்க...

உச்ச நடிகரரோட புதுப்படத்தை தமிழ் புத்தாண்டுல ரிலீஸ் பண்ணுவாங்கன்னு எல்லாரும் ஆவலா இருந்தாலும் படத்தோட பின்னணி இசைசேர்ப்பே ஏப்ரல் 20க்கு மேலதான் தொடங்கப்போகுதாம்... இதெல்லாம் முடிஞ்சு, பர்ஸ்ட் காப்பி ரெடியானாலும் உச்ச நடிகருக்கும், இயக்குனருக்கும் ராசியான நாளா பாத்துத்தான் ரிலீஸ் பண்ணப்போறாங்களாம்... உச்ச நடிகருக்கு வியாழக்கிழமை ரொம்ப புடிச்ச நாளாம்... இயக்குனருக்கு 8ம் நம்பரு ரொம்ப ராசி... இதை கணக்கு பண்ணி ரிலீஸ் தேதியை மே 17க்கு மாத்தி வச்சிருக்காங்களாம்... மாத்தி வச்சி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமா தயாரிப்பு கம்பெனியே அறிவிக்கப்போகுதாம்... அறிவிக்கப்போகுதாம்..

No comments:

Blog Archive