Friday, May 18, 2007

ரஜினி பாலீஷ் ரகசியம்!

 சிக்கென சிவந்து ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட்டாக க்யூட் ரஜினி!
 
 சிவாஜி யூனிட்டே சிலாகிக்கும் ஆச்சர்யம், ரஜினியின் அசத்தல் அழகு! பளபள மினுமினுவென படு பாலிஷாக மின்னுகிறார் 'சிவாஜி'.
 
 தனது பழக்க வழக்கங்களை அடியோடு மாற்றிக்கொண்டதே ரஜினியின் இந்தப் புது பூரிப்புக்குக் காரணம் என்கிறார் 'சிவாஜி'யின் மேக்கப்&வுமன் பானு.
 
பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட், நடுநிசிக்கு மேலும் தூங்காமல் ஆழ்ந்த சிந்தனை... இதுதான் 'சிவாஜி'க்கு முந்தைய ரஜினி!
 
ஆனால், 'சிவாஜி' படத்துக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தலைகீழ் மாற்றம். நாள் ஒன்றுக்கு மூன்று பாக்கெட்டாக இருந்த சிகரெட், தடாலடியாகக் குறைந்து 'ஒரு நாளுக்கு நாலே நாலு மட்டுமே' என கன்ட்ரோலுக்கு வந்தது. தினமும் காலையில் முக்கால் மணிநேரம் யோகா, தியானம். காலையில் மூன்று இட்லி, மாதுளை ஜூஸ், சோழாவில் நீச்சல் பயிற்சி, மதியம் ஹெவியான சாப்பாடு, இரவில் பழங்கள். பத்து மணியடித்தால் தூக்கம் என ஒலிம்பிக்ஸ§க்குத் தயாராகும் அத்லெட் போல அத்தனை மெனக்கெட்டிருக்கிறார் ரஜினி.
 
 ரஜினியின் யூத் லுக்குக்கு அவரது படு ரிச்சான காஸ்ட்யூம்களும் ஒரு காரணம். பாலிவுட்டின் நம்பர் ஒன் காஸ்ட்யூம் டிஸைனர் மனீஷ் மல்ஹோத்ராதான் ரஜினி யின் உடைகளை வடிவமைத்துள்ளார். ஷாரூக், ஹ்ரித்திக், ஐஸ்வர்யா ராய் போன்ற ஸ்டார்களின் பளிச் காஸ்ட்யூம்கள் மனீஷின் கை வண்ணம்தான்!
 
 
 படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி ரெடி! பௌர்ணமி அன்றுதான் ரிலீஸ் செய்யவேண்டும் என்ற சென்டிமென்ட் காரணமாக, மே 31 தேதிக்கு வெயிட்டிங். சுப நிகழ்வுகள் அனைத்துக்கும் ரஜினி சாய்ஸ் பௌர்ணமிதான்!
 
 'சிவாஜி'க்கு 700 பிரின்ட்டுகள் தயாராகின்றன. இது தமிழ் சினிமாவில் அசகாய சாதனை. 'சிவாஜி சுனாமி'க்குப் பிறகு கரையேறலாம் என சுமார் 25 படங்கள் ரிலீஸைத் தள்ளிப்போட்டு இருக்கின்றன.
 
 
 ரஜினி குடும்பத்தினர் படத்தின் ரஷ்ஷைப் பார்த்துவிட்டு 'படு ஹேப்பி'! குறிப்பாக, மாமாவின் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் பார்த்து மிரண்டுவிட்டாராம் தனுஷ். ஆரம்ப காலங்கள் போல முன்பே தெளிவாக ரிகர்சல் செய்துவிட்டு வந்து, ஸ்பாட்டில் பட்டையைக் கிளப்பி யிருக்கிறார் ரஜினி!
 
அக்னி நட்சத்திரம் அடங்கவும், சூப்பர்(ஸ்டார்) நட்சத்திரத்தின் ஆட்டம் ஆரம்பம்!
 
 

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

No comments:

Blog Archive