Wednesday, May 30, 2007

Sivaji TV rights

""ரஜினி நடித்த, "சிவாஜி' படத்தின், "டிவி' உரிமை மூன்று வருடங்களுக்கு பிறகு à®'ளிபரப்ப வேண்டும் என்ற à®'ப்பந்தத்தின் அடிப்படையில் கலைஞர் "டிவி'க்கு விற்கப்பட்டுள்ளது,'' என்று ஏவி.எம்.சரவணன் தெரிவித்தார்.
ரஜினி  ஸ்ரேயா நடித்த, "சிவாஜி' படம் வரும் ஜூன் 15ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தின் உலக வினியோக உரிமையை வாங்குவதற்கு ரிலையன்ஸ், சன் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சி எடுத்தன. ஆனால், ஏவி.எம்., நிறுவனம் படத்தை யாருக்கும் நேரடியாக விற்கவில்லை. உலகம் முழுவதும் வினியோகஸ்தர்கள் மூலம் ஏவி.எம்., நிறுவனமே நேரடியாக படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறது. இந்த படத்தின், "டிவி' உரிமையை வாங்குவதற்கு சன், ஜெயா, கலைஞர் "டிவி'க்கள் இடையே பலத்த போட்டி இருந்தது. ஏவி.எம்., நிறுவனம் தர்ம சங்கடமான நிலையில் இருந்தது.
கலைஞர், "டிவி'க்கு உரிமையை வாங்குவதற்காக கருணாநிதியின் நம்பிக்கைகுரியவர் மூலம் துõது அனுப்பப்பட்டது. "படத்தை கலைஞர் "டிவி'க்கு கொடுங்கள். தலைவரும் விரும்புகிறார். நீங்கள் என்ன தொகை எதிர்பார்க்கிறீர்களோ அந்த தொகையை தந்து விடுகிறோம்' என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதன்பிறகே "சிவாஜி'யின் "டிவி' உரிமை கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்கள் கழித்து தான் "டிவி'யில் à®'ளிபரப்ப வேண்டும் என்று à®'ப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஏவி.எம்.சரவணன் கூறும்போது, ""கலைஞர் "டிவி'க்கு புதிய படங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் "சிவாஜி' படமும் மூன்று வருட à®'ப்பந்தம் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் தியேட்டரில் வெளியானதிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்து தான் "டிவி'யில் à®'ளிபரப்ப வேண்டும். கலைஞர் "டிவி'யில் வரும் ஆகஸ்ட் மாதம் துவக்க விழா அன்று "சிவாஜி' à®'ளிபரப்பப்பட உள்ளதாக வந்த செய்தி தவறானது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வரைமுறைகளுக்கு உட்பட்டு, à®'ப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இதை யாரும் மீற முடியாது,'' என்று தெரிவித்தார்.
கலைஞர் "டிவி'க்கு புதிய படங்கள் : புதிதாக உருவாகும் கலைஞர் "டிவி'யில் புதிய திரைப்படங்களை à®'ளிபரப்புவதன் மூலம் மக்களிடம் வேகமாக அறிமுகம் கிடைக்கும் என்ற நோக்கில் புதிய படங்களை வாங்கிப் போடும் முயற்சியில் இந்த "டிவி' நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். "வெயில், இம்சை அரசன் 23ம் புலிகேசி, குரு' ஆகிய படங்கள் கலைஞர் "டிவி'க்காக பெருந்தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் புதிய படங்களின் தயாரிப்பாளர்களிடமும் இடைத்தரகர்கள் மூலமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அநேகமாக இனி வரும் புதிய படங்கள் அனைத்தும் "கலைஞர் "டிவி'க்கு கிடைக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் உதவி செய்யலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



The fish are biting.
Get more visitors on your site using Yahoo! Search Marketing.

No comments:

Blog Archive