Wednesday, May 09, 2007

ஹாலிவுட் தயாரிப்பாளர் பிரமிப்பு !!!

ஹாலிவுட் தயாரிப்பாளர் பிரமிப்பு நிஜ வாழ்க்கையிலும் ரஜினி சூப்பர் ஸ்டார்


ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார் என்கிறார் இந்தியாவைச் சேர்ந்த ஹாலிவுட் பட அதிபர் திரிலோக் மாலிக்.
நியூயார்க்கில் வசித்து வரும் இந்தியர் திர்லோக் மாலிக். இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். பல படங்களில் நடித்தும் உள்ளார். வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இவரது பல படங்கள் புகழ் பெற்றவை. " லோன்லி இன் அமெரிக்கா " என்ற இவரது படம் பல விருதுகளைப் பெற்றது. இந்தியாவிலிருந்து நியூயார்க் படப்பிடிப்புக்கு வரும் குழுவினருக்கு உதவும் பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

"சிவாஜி" படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் உட்பட படக் குழுவினர் நியூயார்க் சென்றபோது, இவர் உடன் இருந்தார். லொகேஷன்கள் தேர்வு செய்வதிலும் உதவினார்.

இதுகுறித்து திரி லோக் மாலிக் கூறும்போது, பல்வேறு நடிகர்களை பார்த்துள்ளேன். ரஜினிகாந்த் அவர்களில் இருந்து வேறுபட்டவர். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவர் சூப்பர் ஸ்டார். எளிமையான குணம் கொண்டவர் என்றார்.


Ahhh...imagining that irresistible "new car" smell?
Check out new cars at Yahoo! Autos.

No comments:

Blog Archive