Wednesday, May 23, 2007

'சிவாஜி' நகராகும் சென்னை


சென்னை நகரம் சிவாஜி நகரமாகிறது. அதாவது இதுவரை இல்லாத அதிசயமாக சென்னையில், 23 தியேட்டர்களில் சிவாஜி படத்தை திரையிடவுள்ளனராம். 
  

தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக தியேட்டர்களில் புதிய படங்களைத் திரையிடுவார்கள். அதிகபட்சம் ஐந்து தியேட்டர்கள் வரை ஒரு படம் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி விவகாரத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில், 23 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படவுள்ளதாம்.

சிவாஜிக்காக டிக்கெட் கட்டணத்தை குண்டக்க மண்டக்க உயர்த்த தமிழக அரசு மறுத்து விட்டதால், அதிக தியேட்டர்களில் படத்தைத் திரையிட்டு லாபத்தை அள்ள தயாரிப்பு தரப்பும், விநியோகஸ்தர் தரப்பும் முடிவு செய்துள்ளதாம்.

ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட், சாந்தி, சாய் சாந்தி, அபிராமி காம்ப்ளக்ஸ் (நான்கு தியேட்டர்கள்), சத்யம் காம்ப்ளக்ஸ் (2 தியேட்டர்கள்), ஐனாக் (3 தியேட்டர்கள்), உதயம் காம்ப்ளக்ஸ் (4 தியேட்டர்கள்), ஜெயப்பிரதா (2 தியேட்டர்கள்), காசி, பிருந்தா, பாரத், கமலா ஆகிய தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸ் ஆகிறது.

இதுதவிர சென்னை புறநகர்களில் உள்ள 30 தியேட்டர்களிலும் சிவாஜி ரிலீஸாகிறது. மொத்தமாக சென்னை மற்றும் புறநகர்களில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சிவாஜி திரையிடுகிறார்கள்.

சென்னை நகரில் அதிக அளவிலான தியேட்டர்களில் ஒரு படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கமலா தியேட்டரில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்தைத் திரையிடுகின்றனராம். எனவே தியேட்டர் நிர்வாகம் மகிழ்ச்சியில் உள்ளது. அதேபோல காசி தியேட்டரில் முதல் முறையாக ரஜினி படம் திரையிடப்படுவதால் அவர்களும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

No comments:

Blog Archive