Wednesday, May 09, 2007

May 7(2 days ago) 'சிவாஜி' போலி கூப்பன் விற்ற 2 பேர் கைது !!!

ஆவடி, அம்பத்தூரில் உள்ள ராக்கி தியேட்டரில் ரஜினி நடித்த சிவாஜி படம் ரிலீசாக இருக்கிறது. டிக்கெட் வேண்டுவோர் எங்களை அணுகலாம் என்று கூறி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் ரூ.200க்கு போலி கூப்பன் விற்பனை செய்து பல லட்சம் மோசடி செய்த கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை எம்.டி.எச். மெயின் சாலையில் நெல்லை கூல் பார் என்ற பெயரில் கடை நடத்துபவர் சங்கர் (22). இவரது நெருங்கிய நண்பர் சதாசிவம் (40). அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இருவரும் தீவிர ரஜினி ரசிகர்கள் என்று தெரிகிறது.

ரஜினி நடித்துள்ள சிவாஜி படம் அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் விரைவில் ரிலீசாக இருக்கிறது. எனவே, டிக்கெட் தேவைப்படுவர்கள் எங்களை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று பொதுமக்கள், ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களை அணுகி கூப்பன் வாங்கியுள்ளனர். ஓரு கூப்பன் ரூ.200க்கு விற்பனை செய்துள்ளனர். இதன்மூலம் பல லட்சம் வசூலித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், டிக்கெட் விற்பனை விஷயம் ராக்கி தியேட்டர் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. மேனேஜர் அரிகோவிந்த் இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபிபுல்லா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நேற்றிரவு, சங்கர், சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். போலி கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Ahhh...imagining that irresistible "new car" smell?
Check out new cars at Yahoo! Autos.

No comments:

Blog Archive