Monday, July 02, 2007

ரசகுல்லா பூமியில் ரஜினி சிவாஜி "துõள்' இந்தி படங்களை பின்னுக்கு தள்ளியது

கோல்கட்டா : ரஜினி நடித்த, சிவாஜி படம், இந்தி வாலாக்களை மட்டுமல்ல, வங்காளிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது. ரஜினியின் சிவாஜி படம், டில்லி, மும்பையை அடுத்து, "ரசகுல்லா' பூமியான மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவிலும், சக்கை போடு போடுகிறது. கோல்கட்டாவில், "ஐநாக்ஸ்' என்ற "மல்டிப்ளக்ஸ்' தியேட்டர்கள் மிக பிரபலமானவை. பணக்காரர்கள் அதிகமாக வரும் அந்த தியேட்டரில், இந்திப்படங்கள் தான் ஓடும். எப்போதாவது, கமல் உட்பட சிலரின் தமிழ்ப்படங்களை போடுவதுண்டு. ஆனால், இரண்டு வரிசை நாற்காலிகள் நிரம்பினால் அதிசயம். ஆனால், சிவாஜி படம் வெளியிடப்பட்டதில் இருந்து இரண்டு வாரமும், முழு அளவில் இருக்கைகள் நிரம்பி வருகின்றன. சிவாஜி படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் தவிர, இங்குள்ள மற்ற தியேட்டர்களில், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அத்தனை படங்களும், சிவாஜி படத்தால் வசூலை இழந்து விட்டன. அமிதாப் பச்சன் சீனி கூம், சஞ்சய் தத்தின் ஷூட் அவுட் அட் லோகண்ட்வாலா ஆகிய இந்தி படங்களும், ஜார்ஜ் க்ளூனியின் ஆஸ்கார் 13, ஜானி தேப் நடித்த பைரேட்ஸ் ஆப் கரீபியன் ஆகிய ஹாலிவுட் படங்களும், சிவாஜி படத்தால், வசூலை இழந்து விட்டன. இது போல, கோல்கட்டாவில், "83 சினிமாஸ்' என்று அழைக்கப்படும் தியேட்டர் வளாகத்திலும், சிவாஜி படம் திரையிடப்பட்டது. அங்கும், மற்ற இந்திப்படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளப்பட்டன. மொழி புரியவில்லை; ரஜினியே யார் என்பது இப்போது தான் பலருக்கும் தெரியும். அப்படி இருந்தும், பிரமாண்ட காட்சிகள், அட்டகாச நடிப்பு, ஆடல்பாடல்கள் போன்றவை, இந்தி வாலாக்களையும், வங்காளிகளையும் பெரிதும் ஈர்த்துவிட்டன. சமீபத்தில் வெளியான பரபரப்பான படம் "ஜூம் பராபரா ஜூம்' என்ற இந்திப்படம், கோல்கட்டாவில், நான்கு தியேட்டர்களில் ஓடுகிறது. ஆனால், ரஜினியின், சிவாஜி படத்தால், அந்த தியேட்டர்களின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு தமிழ் புரியவில்லை தான். ஆனால், அது பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்கு ரஜினி என்ற மெகா ஸ்டார் நடிப்பு தான் முக்கியம். அனாயாசமாக நடித்துள்ளார் அவர்' என்றார், வங்காளியான தனியார் நிறுவன அதிகாரி பித்யுத் சாட்டர்ஜி.
http://www.dinamalar.com/2007july01/general_ind3.asp

No comments:

Blog Archive