எழுதிய எல்லா வரிகளும் இடம் பெறுவதில்லை ஒரு பாடலில் _ சில நல்ல வரிகளும் செல்ல வரிகளும் இடநெருக்கடியால் இடம் பெறாமல் போவதுண்டு. இறந்து பிறந்த குழந்தைகளோடு உயிருள்ள சில சிசுக்களும் புதைக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி, ஓர் ஓரமாய் இதயம் வலிக்கும்.
‘சிவாஜி’யில் ‘பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்’ பாடலில் இடம்பெற வாய்ப்பில்லாத சரணம் இது :
ஸ்ரேயா : ‘‘ஒரு பார்வையிலே உயிர் உறைந்துவிட்டேன் உங்கள் கண்ணடியில் உள்ள கதகதப்பில் வெயில் காய்வதற்கே இதோ இதோ வந்தேன்
ரஜினி : மன்மதப் பூங்கிடங்கே _ உன்னை எந்தன் மார்புக்குள் அடைகாப்பேன் உனது உயிர் அடிக்கடி சரிபார்ப்பேன் உனது நகம் வளர்கிற இசை கேட்பேன்
ஸ்ரேயா : உம்முடைய வார்த்தையில் வடியும் வாஞ்சையின் கசிவில் நடுநெஞ்சு நனைகிறேன்’’
இந்த வரிகளை வேறெந்தப் பாட்டிலும் இணைக்க இயலாது. இணைத்தாலும் பிறிதொரு மெட்டுக்குள் இது உட்காராது. ஆகவே, ரஜினி ரசிகர்களுக்கே இந்தச் சரணம் சமர்ப்பணம். அவர்கள் இதை பக்தியோடு பாடிப் பரவலாம். பாடலைச் செதுக்கும்போது இப்படி எத்தனையோ சேதாரம்; இதுவொன்றே ஆதாரம்.
No comments:
Post a Comment