Wednesday, July 04, 2007

இன்னும் சிவாஜிதான்

சென்னை மற்றும் உலகெங்கும் சிவாஜி அலை இன்னும் பலமாகத்தான் வீசிக் கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு நாளும் ஒரு புதுச் சாதனை வந்தவண்ணம் இருக்கிறது. 
  
சென்னையில் திரையிடப்பட்டுள்ள 16 தியேட்டர்களிலும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக சிவாஜி கலக்கிக் கொண்டிருக்கிறது. புறநகர்களிலும் இதே நிலைதானாம். புறநகர்களில் மட்டும் 30 தியேட்டர்களில் சிவாஜி ஓடிக் கொண்டிருக்கிறது.

14 நாட்களில் ரூ.3.5 கோடியை வசூல் செய்துள்ளதாம் சிவாஜி. இப்படியே போனால் இன்னும் 10 நாட்ளில் போட்ட பணம் முழுவதும் திரும்பி விடுமாம்.

சென்னை நகர விநியோகஸ்தரான அபிராமி ராமநாதன் கூறுகையில், மூன்று வாரங்களுக்குப் பிறகும் கூட தொடர்ந்து சிவாஜிக்கு பெரும் வரவேற்பு இருப்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது நிச்சயம் ஒரு உலக சாதனைதான்.

இதுவரை இப்படம் ரூ. 3.5 கோடியை சம்பாதித்துள்ளது. மூன்றாவது வார இறுதியில் ரூ. 5 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கிறேன். இன்னும் 2 வாரங்களில் நான் போட்ட முதல் திரும்பி விடும் என்று நம்புகிறேன்.

2 வாரங்களில் 7 லட்சம் பேர் சிவாஜியைப் பார்த்துள்ளனர். எங்களது தியேட்டர் வளாகத்தில் மட்டும் நான்கு தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சியாக சிவாஜி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்திற்கும் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. ரஜினி உண்மையிலேய அசரடித்து விட்டார் என்றார்.

உள்ளூரில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் அதிரடியாக இருக்கிறது சிவாஜி. சிகாகோவில் தொடர்ந்து 3 வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

சிகாகோவிலும், பே ஏரியா பகுதியிலும் சிவாஜி தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டுள்ளதாம். இதற்கு முன்பு எந்த இந்தியப் படமும் இப்படி ஓடியதில்லையாம். சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஷாருக் கானின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படம் 2 வாரங்கள் இங்கு ஓடியதுதான் சாதனையாக இருந்ததாம். இப்போது அதை சிவாஜி ஓவர்டேக் செய்து விட்டார்.

சிவாஜி படு போடு போட்டுக் கொண்டிருப்பதால் மற்ற முன்னணி ஸ்டார்களின் படம் இன்னும் 2 வாரங்களுக்கு வராது என்றே தெரிகிறது. அஜீத் நடித்துள்ள கிரீடம் படம் சிவாஜியின் 5வது வாரத்தில்தான் ரிலீஸ் ஆகிறது. அப்போதும் கூட சிவாஜி அலையில்தான் ரசிகர்கள் மிதந்து கொண்டிருப்பார்கள் போல.
 

No comments:

Blog Archive