Friday, July 27, 2007

ஜப்பானில் 'ஆம்பல்..ஆம்பல்'

சிவாஜி படத்தை இந்தி, சைனீஸ், ஜப்பானிய மொழிகளில் டப்பிங் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன.

ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான விசிறிகள் இருப்பது தெரியும். இதனால் சிவாஜி ஜப்பானுக்குப் போவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்தப் படத்தை சீனாவிலும் வெளியிடப் போகிறார்களாம். இதனால் சீன மொழியிலும் படம் டப் ஆகிக் கொண்டிருக்கிறது.

படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களும் தியேட்டர்களும் சிவாஜியால் 15 நாட்களிலேயே லாபத்தை பார்த்துவிட்டன. சென்னை நகரில் படத்தை வாங்கி வெளியிட்ட அபிராமி ராமனாதனுக்கு மட்டும் ரூ. 2 கோடி லாபம் தந்துள்ளதாம் சிவாஜி.

இப்போது டப்பிங் மூலம் ஒரு ரவுண்டு பணம் பார்க்க தயாராகி வருகிறது ஏவி.எம். இந்தி, ஜப்பான், சீன மொழிகளுக்கு ஏற்ற மாதிரி இசையிலும் மாற்றம் செய்து தரப் போகிறாராம் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்களே அந்தந்த ெமாழியில் அமையப் போகின்றனவாம்.

(ஆம்பல் ஆம்பல்..வெளவல் வெளவல்.. இதை சீனாவில் எப்படி பாடுவார்களோ தெரியலையே...)

இந்திக்கு ரஜினியே டப்பிங் தரப் போகிறாராம். ஜப்பான், சீனாவுக்கு ரஜினி வாய்சுக்கு ஆட்களை பிடித்துவிட்டார்களாம்.

இதற்கிடையே ரஜினியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. பஞ்சு அருணாசலத்துக்கோ அல்லது தனது குரு பாலசந்தருக்கோ அவர் அடுத்த படத்தை செய்து கொடுப்பார் என்கிறார்கள்.

அதே போல தெலுங்கு, இந்தி திரையுலக தயாரிப்பு ஜாம்பவான்களும் ரஜினியை வைத்து படம் எடுக்க ஆர்வம் தெரிவித்து அவரை நச்சரிக்க ஆரம்பித்துள்ளார்களாம்.

மேலும் முன்னாள் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜியுடன் கைகோர்த்துள்ள ரிலையன்சின் ஆட்லேப்சும் ரஜினியை வளைக்க பாலாஜி மூலம் முயல்கிறதாம். பாலாஜிரஜினி நட்பு ஊரறிந்தது.

சந்திரமுகி மூலம் சிவாஜி பிலிம்சுக்கும், சிவாஜி மூலம் ஏவி.எம்முக்கு கை கொடுத்து உதவியதைப் போல தங்களுக்கும் ரஜினி கால்ஷீட் தருவார் என ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிசும் (பாட்சா மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேனர் இது), மறைந்த நாகி ரெட்டியின் விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனமும் எதிர்பார்ப்பில் உள்ளார்களாம்.

இப்போதைக்கு இவ்வளவு பெயர்கள் அடிபட்டாலும் பஞ்சுவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ரஜினியை வில்லனில் இருந்து ஹீரோவாக்கியவர் பஞ்சு அருணாச்சலம். (இளையராஜாவை மியுசிக் டைரக்டர் ஆக்கியவரும் அவரே). இப்போது பஞ்சுவின் நிதி நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லையம். அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. அதிலும் கடைசியாக வந்த மாயக்கண்ணாடி பஞ்சுவை நொடித்துவிட்டது. இதனால் அவருக்கு கைகொடுப்பார் ரஜினி என்கிறார்கள் கோலிவுட் குருவிகள்.

சமீபத்தில் அமெரிக்கா பறக்கும் முன் அருணாசலத்தை அவரது இல்லத்தில் போய் சந்தித்தார் ரஜினி. அப்போது அவரிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார் ரஜினி. பஞ்சு அருணாசலத்தின் பிரச்சனைகளை முழுமையாக கேட்டறிந்தாராம்.

இதனால் ரஜினி அவருக்கு நிச்சயம் கை கொடுப்பார் என்கிறார்கள்
 

No comments:

Blog Archive