தமிழில் வெளியாகி இந்தியா மட்டுமல்ல வெளிநாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சிவாஜி படம், இந்தியாவில் இப்போது மேலும் ஒரு சாதனை படைக்கப் போகிறது. இந்தியில் இந்த படம் டப் செய்யப்பட்டு 120 தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள். தமிழில் தயாரிக்கப்பட்டு ஒரு படம் இந்தியில் அதிக அளவு பிரிண்ட் போட்டு திரையிடப்படுவது இதுவே முதல்முறை. இது பெரிய சாதனையாக தமிழ் சினிமா உலகத்தினர் கூறுகின்றனர்.
சிவாஜி படத்தின் வெளிநாட்டு உரிமை, ஐங்கரன் நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியா தவிர உலகம் முழுவதும், 200 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மலேசியாவில் 56, சிங்கப்பூர் 8, ஆஸ்திரேலியாவில் 8, மத்திய கிழக்கு நாடுகளில் 10, பிரிட்டனில் 20, ஐரோப்பிய நாடுகளில் 20, அமெரிக்காவில் 72 திரையரங்குகளில் சிவாஜி தமிழிலேயே திரையிடப்பட்டது. ஈரோஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் ஐங்கரனின் 51 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது.அதன் பின்னர் சீனா மற்றும் ஜப்பானிய மொழியில் சிவாஜி படத்தை டப் செய்து மேலும் பல திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தென்கொரிய மொழியில் டப் செய்து கடந்த 13ம் தேதி திரையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment