Monday, July 02, 2007

ரஜினி வழியில் சிரஞ்சீவி

கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிரடி வரவேற்புடன்"சிவாஜி' படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஆந்திராவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. "டப்பிங்' படத்திற்கு இந்தளவிற்கு ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது அங்குள்ள முன்னணி நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
"சிவாஜி' படம் தமிழகத்தில் வெளியான அன்றே ஆந்திராவிலும் நுõறு தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. தெலுங்கு உரிமை மட்டும் 14 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதில் ஐதராபாத் செகந்திரபாத் ஏரியா மட்டுமே ஏழரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. படம் 80 தியேட்டரில் "ஹவுஸ்புல்'லாகவும், 20 தியேட்டர்களில் சுமாராகவும் ஓடிக் கொண்டிருப்பதால் தெலுங்கு வினியோகஸ்தர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் 11 கோடி ரூபாய் கலெக்ஷன் ஆகியுள்ளது. இதில் தியேட்டர்காரர்களின் பங்கு போக வினியோகஸ்தரின் பங்கு ஆறே முக்கால் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இப்படி கலெக்ஷன் நீடித்தால் வினியோகஸ்தர்கள் படத்திற்காக போட்ட முழுத் தொகையும் 15 தினங்களுக்குள் கிடைத்து விடும் என்றும், அதன் பிறகு கிடைக்கும் வருவாய் அனைத்தும் வினியோகஸ்தர்களுக்கு லாபம் தான் என்றும் தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஐதராபாத்செகந்திராபாத் பகுதிக்குட்பட்ட நிஜாம் ஏரியாவில் படத்திற்கு கிடைத்த அதிரடி வரவேற்பை பார்த்த தெலுங்கு முன்னணி ஹீரோக்கள் அதிர்ந்து போய் விட்டனராம். முன்னணி ஹீரோக்களின் நேரடி தெலுங்குப் படங்களுக்கு கூட இந்த ஏரியாவில் இப்படி ஒரு வரவேற்பை இதுவரை பார்த்ததில்லை என்றும், ரஜினியின் "சந்திரமுகி'க்கு கிடைத்த வரவேற்பை விட, "சிவாஜி'க்கு அதிகம் வசூலாகி வருகிறது என்றும், தெலுங்கு சினிமா பிரமுகர்கள் ஆச்சரித்துடன் சொல்கின்றனர்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், காங்கிரஸ் அமைச்சர் ரகுவீர ரெட்டியும் இதற்கு ஒரு
விதத்தில் காரணம் என்றும் கூறப்படுகிறது. படத்தில் வரும் சில சம்பவங்கள் ஆந்திர அரசியல் சூழ்நிலைகளை பிரதிபலிப்பதால் இப்படத்தை பார்க்கும்படி தெலுங்கு தேச கட்சியினரை சந்திரபாபுநாயுடு கேட்டுக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆந்திர அமைச்சர் ரகுவீர ரெட்டி"சிவாஜி' படத்தை தெலுங்கில் வெளியிட சந்திரபாபு நாயுடு மறைமுகமாக முதலீடு செய்திருக்கிறார். அதனால் தான் கட்சியினரை பார்க்கச் சொல்கிறார் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு சந்திரபாபு நாயுடு காரசாரமாக பதில் சொல்ல இருவரிடையேயும் அறிக்கைப் போர் நடந்து படத்தை அதிகமானோர் பார்க்க வாய்ப்பாக அமைந்து விட்டது.

ரஜினி வழியில் சிரஞ்சீவி : "சிவாஜி'யின் அதிரடி வெற்றியை பார்த்த நடிகர் சிரஞ்சீவி அவர் நடிக்க, பிரபுதேவா இயக்கும், "சங்கர்தாதா ஜிந்தாபாத்' படத்தை தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வெளியிட ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறாராம். சிரஞ்சீவி தமிழில், "47 நாட்கள், ராணுவவீரன், மாப்பிள்ளை' படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகரானதால் தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. அவரது ரசிகர்கள் தொழில் நிமித்தமாக தமிழகத்திலும் குறிப்பாக முக்கிய நகரங்களிலும் நிறைய பேர் உள்ளனர். இவர்களை குஷிப்படுத்தவும், தமிழகத்தில் தனக்கு உள்ள வரவேற்பை சோதனை செய்யும் நோக்கில், "சங்கர்தாதா ஜிந்தாபாத்' படத்தை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

http://www.dinamalar.com/2007july01/general_ind11.asp

No comments:

Blog Archive